தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, April 13, 2012

தமிழ் ( காணொளி இணைப்பு )

0






எங்கும் தமிழ் வேண்டும் எதிலும் தமிழ் வேண்டும்

இது சாத்தியப்படுமா நண்பர்களா ??

நான் மேலே எழுதியதற்கும் நீங்கள் பார்க்கப் போகும் வீடியோவுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை , (ஆனால் சம்மந்தம் இருக்கு எப்படி ??)


உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் (மனிதர்கள் உள்பட) தங்கள் மொழியிலேயே பேசுகின்றன,

ஆனால் இந்த தமிழர்கள் மட்டும் தங்கள் தாய் மொழியான தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள் இது ஏன் ??

எங்கள் தமிழ் எப்படி எல்லாம் அழிக்கப்படுகிறது தெரியுமா ??
எனக்கு தெறிந்த சில உதாரணங்களைச் சொல்கிறேன்,

தமிழ் முதலில் அழிக்கப்படுவது பள்ளிக்கூடம் 


நான் ஒரு 10 வயது சிறுமியிடம் தொலைபேசியில் பேசினேன் , அப்பொழுது அவள் நீங்கள் எப்பொழுது என்னைப் பார்க்க வருவீர்கள் என்று கேட்டாள், நான் இன்னும் 5 மாசத்துல உன்னைப் பார்க்க வருவேன் என்று சொன்னேன் , அதற்கு அவள் 5 மாசம் என்றால் என்ன ? எனக்கு தெறியல ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று சொன்னாள். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது , நான் five என்று ஆங்கிலத்தில் சொன்ன பிறகே அவளுக்கு விளங்கியது .

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் தமிழ் முதலில் அழிக்கப்படும் இடம் பள்ளிக்கூடம் தான். இப்பொழுது உள்ள பள்ளிக்கூடங்களில் தமிழில் சொல்லிக்கொடுப்பது இல்லை, ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை , ஆனால் தாய் மொழி முக்கியம் இல்லையா ??

விமான நிலையம்


உலகத்தில் எந்த நாட்டின் விமான நிலையத்துக்குப் போனாலும் கூடுதலான அதிகாரிகள் தங்கள் நாட்டு மொழியிலேயே பயணிகளிடம் பேசிகிறார்கள் . ஆனால் நம் தமிழ்நாட்டு விமான நிலையத்துக்குப் போனால் எங்களின் தாய்மொழி தமிழ் தவிர அனைத்து மொழியிலும் பேசுவார்கள் , இது ஏன் ??
நாம் தமிழில் பேச வேண்டும் என்றால் வேறு ஒருவரை அழைத்து வந்து மொழிமாற்றம் செய்கிறார்கள், இது ஏன் ?? நமது தமிழ்நாட்டில் நமது தாய்மொழியான தமிழில் பேச தமிழர்களாகிய நாம் காத்திருக்க வேண்டியிருக்கு, எந்த ஒரு நாட்டிலும் வேறு மொழியில் பேசவே மொழிபெயர்ப்பாளர் இருப்பார் , ஆனால் நம் தமிழ்நாட்டில் தமிழில் பேசவே மொழிபெயர்ப்பாளரா ??

இப்படி பல இடங்களில் எங்கள் தமிழ் அழிக்கப்படுகிறது

தமிழர்களே நீங்கள் தேவை இல்லாமல் எவ்வளவோ நேரங்களைச் செலவிடுவீர்கள், நம் தமிழுக்காக கொஞ்ச நேரம் செலவழித்து சிந்தித்துப் பாருங்கள் ..........

உங்களுக்கே எல்லாம் புரியும் .

நன்றி , வணக்கம் .


இந்த கிளிகள் தங்கள் தாய் மொழியில் பேசுவது போல, நம் குழந்தைகளும் நம் தாய்மொழியான தமிழில் பேசுவார்களா ??

இது சாத்தியமா நண்பர்களா ??









You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips