தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 21, 2012

கைகளும் இல்லை, கால்களும் இல்லை, கவலையும் இல்லை (காணொளி இணைப்பு)

0






இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் வாழ முடியுமா ??
எப்படிச் சாத்தியமாகும் ??
முடியும் என்கிறார்
Nick Vujicic











நிக் 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் பிறந்தவர். இவர் பிறக்கும் போதே டெல்ரா-அமெலியா சின்ட்ரோம் (இரண்டு கைகள்,கால்கள் இல்லாமை) என்னும் நோயால் பாதிக்கப்பட்டார். குழந்தை பருவத்தில் பல இன்னல்களுக்கு ஆளான நிக் தன்னுடைய குறைகளையும் தாண்டி பல சாதனைகளை புரிந்துள்ளார்.


ஆரம்பத்தில் இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. பின் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு படிக்கும் சூழல் ஏற்பட்டது. தன்னுடைய 7 ம் வகுப்பில் பள்ளி மாணவத் தலைவராக இருந்தார். பள்ளிக்கு தேவையான நன்கொடைகளை சேகரித்தல் போன்றவற்றில் மிக ஆர்வமாக செயற்பட்டார்

இவர் தனது 8 வது வயதில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின் பெற்றோர்களின் அன்பான அரவணைப்பின் காரணமாக அதனை கைவிட்டார். நிக்கின் தாயார் செய்தித்தாள்களில் வெளியாகிய மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை பற்றிய செய்திகளை நிக்கிற்கு காட்டினார். அதனை படித்த நிக்கிற்கு புதிய தன்னம்பிக்கை பிறந்தது.


நிக் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பணிகளையும் வேறொருரின் உதவியின்றி தானாகவே செய்ய பழகிக்கொண்டார். குறிப்பாக தானாகவே எழுதுவதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.கணனியில் வேலைகளை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிவது, ட்ரம்ஸ் இசைக்கருவியை வாசிப்பது, தலை வாரிக்கொள்வது, பல் துலக்குதல், முகச்சவரம் செய்தல், தொலைபேசியை உபயோகிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் தனியாக செய்ய தன்னை தயார்படுத்திக்கொண்டார்.


2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திர்க்குப் பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகின்றார்.


2005 ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை பெற்றார். இவரின் பேச்சாற்றலுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் 20 க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ளனர். தன்னுடைய சேவைகளை தொலைக்காட்சி மூலமாகவும் புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகின்றார்.

இவரின் லைஃப் வித்அவுட் லிமிட்ஸ் (Life Without Limits) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் இளைஞர்களுக்காக No arms,No legs,No worries என்ற தலைப்பில் தனது பேச்சு பற்றிய குறுந்தகடை வெளியிட்டுள்ளார். இவரின் தன்னம்பிக்கையும் விடமுயற்சியுமே இவரை இந்த அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்றால் அது மிகையல்ல.




தொகுப்பு: வினோ 





You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips