எஸ்-III பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விரைவிலும், ஆசியாவில் சற்று தாமதமாகவும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சுங் கேலக்ஸி எஸ்-III 4.8 அங்குலம் HD சூப்பர் அமோல்ட் தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரை வசதி உள்ளது.
அன்ராய்ட் 4.௦ ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குவதால் உயர்தர தொழில்நுட்பத்தினை பெறமுடியும். மேலும் குவாட் கோர் மைக்ரோ ப்ராசசரைக் கொண்டுள்ளதால் இதன் மூலம் வேகம் அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் 12 மெகா பிக்சல் கேமராவினையும், 1.9 மெகா பிக்சல் முகப்பு கேமராவினையும் பெற்றுள்ளது. மார்பில் ஒயிட் மற்றும் பர்பிள் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ் - வாய்ஸ் என்ற மிக உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஸ்டே, ஸ்மார்ட் அலர்ட், சோசியல் டேக், ஸ் பீம், ஆகிய தொழில்நுட்பங்களும் உள்ளது. 16 , 32 , 64 ஜி பி என்று மூன்று விதமான மாடல்களில் கிடைக்கிறது.
இதன் விலை பற்றிய சரியான விபரம் தெரியவில்லை. இந்தியாவில் 40000 விலையை ஒட்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....