தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, May 15, 2012

வருகிறது ஐ போன் பிளஸ் (படங்கள் இணைப்பு )

, 0






செல்போன் உலகில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சுங் கேலக்ஸி எஸ்-III சமீபத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கிறது .


அடுத்ததாக அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ஐ போன் 5. சென்ற வருடம் ஆப்பிள் நிறுவனத்தார் ஐ போன் 4 வெளிவந்த பிறகு ஐ போன் 5 க்கு பதிலாக ஐ போன் 4s வெளியிட்டு விற்பனையில் சாதனை படைத்தார்கள்.


அதேபோல் இப்பொழுதும் ஐ போன் 5 வெளியிடாமல் ஐ போன் பிளஸ் என்ற பெயரில் புது ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிடுகிறார்கள்.


இந்த போனில் பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அதில் முக்கியமாக அதன் தடிமன் . இதுவரை எந்த நிறுவனமும் வெளியிடாத மிகவும் மெல்லிய தடிமன் கொண்டதாக ஐ போன் பிளஸ் உள்ளது.


செல்போன் உலகில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.


1- ஐ போன் பிளஸ்சிலிருந்து ஐ போன் பிளஸ்க்கு தொடர்புகொள்வது முற்றிலும் இலவசம்.


2- facebook , google + , twitter போன்ற வலைத்தளங்களை இனைய இணைப்பு இல்லாமல் பார்வையிடலாம்.


மேலும் 4.3 இன்ச் தொடுதிரை வசதியும், 10 மெகா பிக்சல் பின்புற கேமராவும், 2 மெகா பிக்சல் முகப்பு கேமராவினையும் கொண்டுள்ளது. இதுவரை இல்லாத தொழில்நுட்பங்கள் ஐ போன் பிளஸ் இல் வெளிவரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பு : படங்களைப் பார்த்த பிறகு கீழே எழுதி இருக்கும் தகவலை வாசிக்க மறக்கவேண்டாம்.


( படத்தின் மேலே அழுத்தி படங்களைப் பெரிதாக பார்க்கவும் )






மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் என்ன செய்வது மேல உள்ள படங்கள் போடோஷோப்பிங் முறையில் பொய்யாக உருவாக்கப்பட்டது. ஆப்பிள்  நிறுவனத்தார் இதைப்பார்த்து இப்படி ஒரு போனை உருவாக்கினால் நன்றாக இருக்கும்.
You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips