தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, July 7, 2012

உலகின் சிறந்த 10 வெளிறி விலங்குகள் (படங்கள் இணைப்பு)

0






அழகான வெளிறி விலங்குகளின் படைப்பு என்பது இயற்கையின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விலங்குகள் வெள்ளை நிறத்தில் பிறப்பது இயற்கை. ஆனால் சிங்கம், புலி, மயில் போன்ற சில இனங்களில் வெளிறி நிறங்களில் பிறப்பது அரிது. இந்த விளங்குகள் உலகில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அப்படிப்பட்ட அரிய விலங்குகளில் சிறந்த 10.



10. மயில்


மயில் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் தோகையும் நடனமும் தான். மயிலின் தோகை அழகான பல வண்ண நிறங்களில் காணப்படும். அப்படிப்பட்ட வண்ண நிறங்கொண்ட மயில் வெளிறி நிறத்திலும் மிகவும் அரிதாக காணப்படுகிறது.



9. மான்


உலகில் மொத்தம் 300 வெளிறி நிற மான்களே வாழ்வதாக கணக்கிடப்படுகிறது. புராணங்களில் வெளிறி நிற மான்கள் முக்கியமான ஒன்றாக இருந்தது. இந்த வகை மான்கள் கார்சான், டெக்சாஸ், அமெரிக்கா போன்ற இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.



8. டால்பின்

டால்பின்களுக்கும் மனிதனுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. சீனாவில் உள்ள பேர்ல் ஆற்றில் 140 வெளிறி வகை டால்பின்கள் காணப்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நகரில் வெளிறி டால்பின் கண்காட்சி பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. வெளிறி டால்பின்களின் எடை, நீளம் போன்றவை சாதாரண  டொல்பின்களைப் போன்றே காணப்படுகின்றன.



7. அணில்

உலகில் பரவலாக அனைத்து நாடுகளிலும் அணில் காணப்படுகிறது. அணில் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் மேல் உள்ள மூன்று கோடு. அதற்கு ஒரு பெரிய கதையே உள்ளது. ஆனால் இந்த வெளிறி அணிலில் அந்த கோடு காணப்படுவதில்லை. இந்த வகை அணில்கள் சற்று ஆபத்தானவை என்று சொல்லப்படுகிறது.



6. திமிங்கலம்

உலகில் மொத்தம் 40 வகை திமிங்கலம் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் வெளிறி திமிங்கலம் மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. சூடான அல்லது மிதமான வெப்பநிலை கொண்ட தண்ணீரில் மட்டுமே இந்த வகை திமிங்ககளால் வாழமுடியும். அதனால் ஆர்டிக் பிராந்தியத்தில் அருகிலேயே இந்த வகை அரிய வெளிறி திமிங்கலங்களை காணமுடிகிறது.



5. பனிக்கரடி

இது பெரும்பாலும் ஆர்டிக் பகுதிகளிலேயே பெரும்பாலும் காணப்படுகிறது.
மிகவும் குளிர்ச்சியான பகுதிகளிலேயே வாழும் இந்த பனிக்கரடி பழுப்பு நிறத்தை கொண்டது. வெளிறி நிறத்திலும் அதிகமாக காணப்படுகிறது.



4. கொரில்லா

வெளிறி விலங்குகளில் மிகவும் அரிதான ஒன்று கொரில்லா. உலகில் மொத்தம் ஒற்றை இலக்க எண்ணிக்கைலையே காணப்படுகின்றன. இது சாதாரண கொரில்லாக்களை விட கூடுதல் வருஷம் வாழக்கூடியது. 38 முதல் 40 வயது வரை வாழும் தன்மை கொண்டது.



3. கங்காரு

ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்கு. இந்த வெளிறி கங்காரும் ஆஸ்திரேலிய நாட்டிலேயே காணப்படுகின்றன. நிறத்தில் மட்டுமே மாறுபட்டு காணப்படும் வெளிறி கங்காரு அதன் நடவடிக்கை, குணம் மற்றும் அனைத்தும் சாதாரண வகை கங்காருவைப் போன்றே காணப்படுகின்றது. இதன் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இப்பொழுது சற்று அதிகமாக காணப்படுவதாக அறியப்படுகிறது.



2. சிங்கம்

ஆப்பிரிக்க காட்டில் பழங்குடியினர் தங்கள் காட்டில் வெளிறி சிங்கம் காணப்படுவதாக கூறுகிறார்கள். உலகில் உள்ள பெரிய விலங்கு சரணாலயங்களிலேயே காணப்படுகின்றன. காட்டு ராஜாவான சாதாரண சிங்கத்தைப் போன்றே அனைத்து குணங்களும் காணப்படுகின்றன. மொத்தம் 550 மட்டுமே காணப்படும் இந்த வெளிறி சிங்கம் பாதுகக்கப்படவேண்டிய மிருகங்களில் ஒன்று.




1. புலி

உலகில் உள்ள மிகவும் அழகான விலங்குகளில் இந்த வெளிறி புலியும் ஒன்று. நீல நிற கண்கள், இளஞ்சிவப்பு மூக்கு, கருப்பு உதடு போன்றவை இதன் சிறப்பு அம்சமாகும். சாதாரண புலிகளுடன் ஒப்பிடுகையில் இந்த வெளிறி வகை புலி விரைவாக பருவமடைகிறது. விலங்கு சரணாலயங்களில்  பார்க்கும் மக்கள் இந்த புலியை வீட்டிற்கு கொண்டுபோய் வளர்க்க ஆசைப்படும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும்.

You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips