நானோ தொழில்நுட்பம்
நானோ தொழில்நுட்பம் எனப்படுவது
100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த
உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக
அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும்,
அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம்
என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு நானோ மீட்டர்
என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு
பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு
நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான
அணுக்களே அமர முடியும். பொதுவாக
ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.
புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்.
நானோ தொழில் நுட்பம்
என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால்
நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று
பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம்
நானோ தொழில் நுட்பம் ஒரு
தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த
தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல்,
இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம்
செய்து வருகின்றது.